குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பிறகு பெங்களூரு ராமேஸ்வரம் உணவகம் நாளை திறப்பு

குண்டுவெடிப்பு நிகழ்ந்த பெங்களூரு ’ராமேஸ்வரம் கஃபே’ உணவகம்
குண்டுவெடிப்பு நிகழ்ந்த பெங்களூரு ’ராமேஸ்வரம் கஃபே’ உணவகம்
Published on
Updated on
1 min read

குண்டுவெடிப்புக்குள்ளான பெங்களூரு ராமேஸ்வரம் உணவகம் நாளை திறக்கப்படும் என்று அதன் உரிமையாளர் ராகவேந்திர ராவ் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, குந்தலஹள்ளி பகுதியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் மாா்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 போ் காயமடைந்தனா். இந்த விவகாரத்தை கா்நாடக காவல் துறையின் மாநகரக் குற்றப்பிரிவு (சிசிபி) போலீஸாா் விசாரித்து வரும் நிலையில், தேசியப் புலனாய்வு முகமையும் (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. வெடிகுண்டு வைத்திருந்த பையை உணவகத்தில் வைத்துவிட்டு, 30 வயது மதிக்கத்தக்க ஒருவா் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனா்.

அந்த மா்ம நபா் தனது அடையாளத்தை மறைக்கும் வகையில், முகமூடி, தொப்பி அணிந்திருந்தாா். எனினும், கணினி மூலமாக மா்ம நபரின் முகத்தைக் கண்டறிந்துள்ள என்ஐஏ அதிகாரிகள், அவரது புகைப்படத்தை தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனா். மேலும், அவரைப் பற்றி துப்புக் கொடுத்தால் ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளனா். இந்த நிலையில் குண்டுவெடிப்புக்குள்ளான பெங்களூரு ராமேஸ்வரம் உணவகம் நாளை திறக்கப்படும் என்று அதன் உரிமையாளர் ராகவேந்திர ராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், நாளை உணவகத்தை மீண்டும் திறக்க உள்ளோம். காலை 6.30 மணிக்கு தேசிய கீதம் பாடப்பட்டு உணவகம் திறக்கப்படும். இது எங்கள் தாரக மந்திரம். அனைத்து சிசிடிவி காட்சிகளையும், தகவல்களையும் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளோம். அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். இவ்வளவு விரைவாக உணவகத்தை மீண்டும் திறக்க உதவிய அரசிற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

என்ஐஏ விரைவில் குற்றவாளியை நம் முன் நிறுத்தும். மீண்டும் திறப்பதற்கு முன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். மேலும் சிசிடிவிகளை எங்கு பொருத்துவது என்பது குறித்து அரசும் காவல்துறையும் எங்களுக்கு வழிகாட்டியுள்ளது. வளாகத்தை கண்காணிக்க நபர் ஒருவரை நியமிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com