பெங்களூரு குண்டுவெடிப்பு குற்றவாளி அணிந்திருந்த தொப்பி சென்னையில் வாங்கப்பட்டதா?

பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களைப் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு குண்டுவெடிப்பு குற்றவாளி அணிந்திருந்த தொப்பி சென்னையில் வாங்கப்பட்டதா?
Shailendra Bhojak

சென்னை: பெங்களூருவில் உள்ள உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரும் கர்நாடக மாநிலம் ஷிவமோகா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

குற்றவாளியை நெருங்கிவிட்டதாகவும் இரவு பகல் பாராமல், இந்த வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விசாரணையில், தொடக்கம் முதல் ஒரே ஒரு அடையாளம்தான் கிடைத்திருந்தது. அதுதான் குற்றவாளி அணிந்திருந்த 10 என்ற எண் கொண்ட தொப்பி. குற்றவாளி, சம்பவ இடத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவு சென்று அங்கு தொப்பியை வீசிவிட்டு, ஆடையை மாற்றிக் கொண்டு பேருந்தில் ஏறுவது சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

பெங்களூரு குண்டுவெடிப்பு குற்றவாளி அணிந்திருந்த தொப்பி சென்னையில் வாங்கப்பட்டதா?
பொதுத் தேர்தலால் மாணவர்களுக்குக் கொண்டாட்டம்; பெற்றோருக்கு?

எனவே, அந்த தொப்பியை வைத்து விசாரணையை நகர்த்திய அதிகாரிகளுக்கு, தென்னிந்தியாவில் மொத்தமாக அதுபோன்ற 400 தொப்பிகள் விற்றுள்ளதும், அதில், ஒரு தொப்பியை இரண்டு இளைஞர்கள் வாங்கியிருப்பதும், அவர்கள் ஷிவமோகாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர் விசாரணையில், அவர்கள் தலைமறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களது அடையாளங்கள் குற்றவாளிகளோடு ஒத்துப்போகிறதா என்று சோதனை நடந்து வருகிறது.

பெங்களூரு உணவகத்தில் குண்டுவெடித்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரும், சில நாள்கள் சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்ததாகவும் தேசிய புலனாய்வு முகமை நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குண்டுவெடிப்புக்குப் பிறகு குற்றவாளிகள் இருவர், கர்நாடகத்திலிருந்து கேரளம் சென்று, அங்கிருந்து தமிழகம் வந்து, தமிழகத்திலிருந்து ஆந்திரம் தப்பிச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பெங்களூருவில் குண்டுவெடிப்பை நடத்திய நபர், சென்னையில் தங்கியிருந்ததாகவும், குண்டுவெடிப்பை நடத்திய போது அணிந்திருந்த தொப்பியை அவர் சென்னை சென்டிரல் பகுதியில் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குண்டு வெடித்த இடத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில், அந்த தொப்பி கைப்பற்றப்பட்ட நிலையில் தேசிய புலனாய்வு முகமை விசாரணையை தீவிரப்படுத்தியிருந்தது.

மேலும், சென்னை சிட்டி சென்ட்டரில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பெற்று தேசிய புலனாய்வு முகமை விசாரணையை நடத்தி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஏற்கனவே 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்த நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் மொஹம்மது சபீர் என்று அடையாளம் காணப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com