சொமேட்டோ நிறுவனர்- மெக்ஸிகன் மாடல் திருமணமா?
தீபிந்தர் கோயல்-கிரேஸியா முனொஸ் திருமணம்? தகவல்கள் பரவல்!


சொமெட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல், மெக்ஸிகன் தொழில் முனைவோர் கிரேஸியா முனொஸை மணந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் நம்பிக்கைக்குரிய புத்தாக்க தொழில் நிறுவனமான சொமெட்டோவின் நிறுவனர் தீபிந்தர் சமீபத்தில் அறிமுகப்படுத்திய சைவப் பிரியர்களுக்கு மட்டுமான பிரத்யேக சீருடை மற்றும் சேவை, பரவலான பேசுபொருளானது. பின்னர் பச்சை நிற சீருடை சொமேட்டோ திரும்ப பெற்றது.
இந்த நிலையில் தீபிந்தர் கோயலுக்கும் முன்னாள் மாடலாக இருந்த கிரேஸியா என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருவரும் தேனிலவுக்கு பின்னர் பிப்ரவரியில் இந்தியா திரும்பியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் இது குறித்து எந்த அறிவிப்பும் இருவரும் வெளியிடவில்லை.
கிரேஸியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘தற்போது இந்தியாவில் உள்ள இல்லத்தில்’ என அவர் நிலைத்தகவலில் குறிப்பிட்டுள்ளார்.
உயர்ரக பொருள்கள் விற்பனையை சமீபத்தில் சந்தையில் அறிமுகப்படுத்திய முனோஸ், தில்லியில் எடுத்த படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக தீபிந்தருக்கு அவரோடு ஐஐடியில் படித்த கஞ்சன் ஜோஸி என்பவருடன் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...