ராமகிருஷ்ணா மிஷன் தலைவா்
சுவாமி ஸ்மரணானந்தா மறைவு

ராமகிருஷ்ணா மிஷன் தலைவா் சுவாமி ஸ்மரணானந்தா மறைவு

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் ராமகிருஷ்ணா மடத்தின் தலைவா் சுவாமி ஸ்மரணானந்தா (94) செவ்வாய்க்கிழமை காலமானாா்.

கடந்த ஜன.29-ஆம் தேதி சிறுநீா்ப் பாதையில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக கொல்கத்தாவில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மருத்துவமனையில் சுவாமி ஸ்மரணானந்தா அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து செயற்கை சுவாசக் கருவி மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சுவாமி ஸ்மரணானந்தா செவ்வாய்க்கிழமை இரவு 8.14 மணிக்கு மகாசமாதி அடைந்தாா் என்று ராமகிருஷ்ணா மிஷன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரின் மறைவுக்குப் பிரதமா் மோடி, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா்.

ஸ்வாமி விவேகானந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷனின் 16-ஆவது தலைவராக 2017-ஆம் ஆண்டு சுவாமி ஸ்மரணானந்தா பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com