பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - நீதிமன்றம் நோட்டீஸ்

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை என்று வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை மூட்டைகள்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை மூட்டைகள்.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணாமல் போனதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கடந்த 2018 முதல் 2020ஆம் ஆண்டு காலக்கட்டத்துக்குள் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்டு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சுமார் 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை என்று பத்திரிசையாளர் அரவிந்த்தாக்சன் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை மூட்டைகள்.
கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

கடந்த 2018 - 2020ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் விவரம் குறித்து மத்திய உள் விவகாரத் துறை அமைச்சகம் அளித்த தரவுகளுக்கும், தேசிய குற்றப்பதிவியல் ஆவணக் காப்பகம் அளித்த தரவுகளுக்கும் இடையே இந்த வேறுபாடு குறித்து விளக்கமளிக்குமாறு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணாமல் போனது குறித்து அடுத்த 4 வார காலத்துக்குள் மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

தில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, போதைப் பொருள் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்படும் ஹெராயின் மதிப்பு 5 லட்சம் கோடியாகும் என்று அரவிந்த்தாக்சன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்விவகாரத் துறை அளித்த தரவுகளில், கடந்த 2018ஆம் ஆண்டு 19,691.155 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதில் 2,571.945 கிலோ ஹெராயின் அளவு மாறுபட்டிருப்பதாக அரவிந்த்தாக்சன் தொடர்ந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மனுவில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், 2018ஆம் ஆண்டு சிக்கிமில் 15 ஆயிரம் கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகப் பதிவாகியிருக்கிறது. ஆனால், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதனை உறுதி செய்யவில்லை.

இந்த அடிப்படையில் பார்த்தால், கடந்த 2018 முதல் 2020ஆம் ஆண்டு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளில் ஒட்டுமொத்தமாக 70,772.544 கிலோ ஹெராயின் காணாமல் போயிருக்கிறது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பறிமுதல் செய்யப்பட்டு காணாமல் போயிருக்கும் போதைப்பொருள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.இது குறித்து மாநில புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com