மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: 11 மாநிலங்களில் வாக்காளர்கள் ஆர்வம்

News image
பிரோசாபாத்தில் வாக்களிக்க காத்திருந்த மக்கள்- ANI
Updated On :7 மே 2024, 1:02 pm

DIN

மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 மணியோடு நிறைவடைந்துள்ளது.

நாடு முழுவதும் 11 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.92 சதவிகிதம் வாக்குப் பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளில் பிற்பகல் 1 மணியளவில் 49.27 சதவிகித வாக்குகள் பதிவாகின.

குஜராத்தில் 25, கா்நாடகத்தில் 14 (இங்கு இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு), மகாராஷ்டிரத்தில் 11, உத்தர பிரதேசத்தில் 10, மத்திய பிரதேசத்தில் 9, சத்தீஸ்கரில் 7, பிகாரில் 5, அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் தலா 4, கோவாவில் 2, தாத்ரா-நகா் ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.