வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

குஜராத்தில், பாஜக எம்.பியின் மகனும் பாஜக உறுப்பினருமான விஜய் பாபோர் வாக்குச்சாவடியைக் கைப்பற்றி அதனை நேரலையில் ஒளிபரப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் பாபோர்
விஜய் பாபோர்

மக்களவைத் தேர்தல் மூன்றாம் கட்டமாக குஜராத்தில் நேற்று (மே.7) நடைபெற்றது. அதில், தாஹோத் தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஜஸ்வந்த் சிங் பாபோரின் மகன் விஜய் பாபோர், மஹிசாகர் பகுதி சந்த்ரம்பூர் தாலுகாவைச் சேர்ந்த பர்தம்பூர் கிராமத்தில் வாக்குச்சாவடியை கைப்பற்றி அதனை இன்ஸ்டாகிராம் நேரலையில் பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அங்கு வந்த வாக்காளர்களை வாக்களிக்க விடாததுடன் அங்குள்ள தேர்தல் அலுவலர்களை மிரட்டி அவமதித்து, போலி வாக்குப்பதிவும் செய்துள்ளார். இவை அனைத்தும் காணொளியில் பதிவாகி உள்ளது.

அந்தக் காணொளி அனைவராலும் பகிரப்படுவது தெரிந்ததும் அதனைத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார் விஜய் பாபோர்.

இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முந்தைய தேர்தல்களிலும் நடத்துள்ளதாக அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாஜக எம்.பி ஜஸ்வந்த் சிங் பாபோர்
பாஜக எம்.பி ஜஸ்வந்த் சிங் பாபோர்Dinamani

பாஜக உறுப்பினரின் இந்த அராஜகத்தைக் கண்டித்து, தாஹோத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் பிரபாபென் தவியத், மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்டத் தேர்தல் ஆணையரிடமும் புகாரளித்துள்ளார். அவர்கள் இந்தப் புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இந்தமுறை தாஹோத் தொகுதியில் மொத்தமாக 58.66% வாக்குபதிவு நடைபெற்றுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் குஜராத்தில் பாஜகவே அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com