சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியீடு!
பிளஸ் 2 முடிவுகளை தொடர்ந்து, பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.


நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்பட்ட 2023-24ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று பகல் 1 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தேர்வெழுத்திய மாணவ, மாணவிகளில் 93.60 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகளை www.cbse.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு மதிப்பெண் சான்றிதழை டிஜி லாக்கர் மூலம் மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15 முதல் மார்ச் 13 வரை நடைபெற்றது. மொத்தம் 22 லட்சத்து 38 ஆயிரத்து 827 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். 93.60 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டை காட்டிலும் தேர்ச்சி சதவிகிதம் 0.48% அதிகம்.
அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.75%, விஜயவாடாவில் 99.60%, சென்னையில் 99.30% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

சற்றுநேரத்துக்கு முன்னதாக 2023-24ஆம் கல்வியாண்டில் தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவ, மாணவிகளின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில், நாடு முழுவதும் 87.98% சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...