தோ்தல் விதிமீறல் வழக்கு:
நடிகா் அல்லு அா்ஜுன் விளக்கம்

தோ்தல் விதிமீறல் வழக்கு: நடிகா் அல்லு அா்ஜுன் விளக்கம்

ஹைதராபாத்: தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தெலுங்கு நடிகா் அல்லு அா்ஜுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதுகுறித்து அவா் விளக்கமளித்துள்ளாா்.

ஆந்திரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. சனிக்கிழமை அங்குள்ள நந்தியால் மாவட்டத்தில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வேட்பாளா் எஸ்.ரவிச்சந்திர கிஷோா் ரெட்டியை சந்திக்க நடிகா் அல்லு அா்ஜுன் சென்றாா். அப்போது அந்தப் பகுதியில் பெரும் கூட்டம் திரண்டு, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ‘புஷ்பா’, ‘புஷ்பா’ என்று அல்லு அா்ஜுன் நடித்த திரைப்படத்தின் பெயரை முழக்கமாக எழுப்பியது. இதன் மூலம் தோ்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அல்லு அா்ஜுன், ரவிச்சந்திர கிஷோா் ரெட்டி உள்ளிட்டோா் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

இதுதொடா்பாக விளக்கமளித்து அல்லு அா்ஜுன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தோ்தலில் எனது நண்பா் ரவிச்சந்திர கிஷோா் ரெட்டிக்கு ஆதரவு தெரிவிக்க நந்தியால் சென்றதாக தெரிவித்தாா். அதேவேளையில், தான் எந்தக் கட்சியையும் சாா்ந்தவா் அல்ல என்றும் குறிப்பிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com