புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பொருளாதார மண்டலத்தில் தமிழகம் முதலிடம்!: டி.பி. வேர்ல்ட்

News image
Updated On :16 மே 2024, 1:37 pm

DIN

புதுதில்லி: இந்தியாவிலேயே அதிக தொழில் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்று உலகளாவிய தளவாட நிறுவனமான டி.பி. வேர்ல்டு தெரிவித்துள்ளது.

சென்னையில் டி.பி. வேர்ல்ட் அதன் மிகப்பெரிய வர்த்தக கிடங்கு மண்டலத்தின் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது. மும்பைக்கு அடுத்தபடியாக நிறுவனத்தின் இரண்டாவது மிக பெரிய வர்த்தக கிடங்கு மண்டலம் சென்னையில் அமையப்பெற்றுள்ளது. அதே வேளையில் தெற்காசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் கடல் வழியாக சென்னை இணைக்கப்பட்டுள்ளதால் பல நன்மைகளும் இதில் உள்ளது என்று டிபி வேர்ல்ட் துணைத் தலைவர் ரஞ்சித் ரே தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே பொருளாதார மண்டலம் அமைக்க உகந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. சுமார் 6 லட்சம் சதுர அடியில் சென்னை பொருளாதார மண்டலம் பரவியுள்ளது. இது 2 மில்லியன் சதுர அடியாக வளரும் திறன் கொண்டது. கடந்த 40 முதல் 50 ஆண்டுகளாக நாட்டின் மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது.

டிபி வேர்ல்டின் ஒருங்கிணைந்த சென்னை வணிக பூங்காவானது, பொருளாதார மண்டலமான காட்டுப்பள்ளி, எண்ணூர் மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய துறைமுகங்களிருந்து சுமார் 40 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ளது. தற்போது இந்தியாவில், டி.பி. வேர்ல்டிற்கு மூன்று பொருளாதார மண்டலங்கள் உள்ளது. சென்னையில் 125 ஏக்கரும், இரண்டாவதாக மும்பை ஜே.என்.பி.ஏ.வில் 85 ஏக்கரும், கொச்சியில் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள புதிய பொருளாதார மண்டலமானது ஆட்டோ, எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, சுகாதாரம், ரசாயனங்கள் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் உள்ளிட்ட பல துறைகளுக்கு இது பிரத்தியேகமாக அடித்தளத்தை இது வழங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.