இந்தியா-வங்கதேச எல்லையில் ரூ.12 கோடி தங்கக் கட்டிகள் பறிமுதல்

இந்தியா-வங்கதேச எல்லையில் ரூ.12 கோடி மதிப்புள்ள 89 தங்கக் கட்டிகளுடன் கடத்தல்காரரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள்.
கைப்பற்றப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள்.(ஏஎன்ஐ)

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் இந்தியா-வங்கதேச எல்லையில் இருந்து ரூ.12 கோடி மதிப்புள்ள 89 தங்கக் கட்டிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.

மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தலின் 6 ஆவது கட்ட வாக்குப்பதிவு நேற்று (மே 25) நடைபெற்றது. தெற்கு வங்க எல்லைக்கு உள்பட்ட ஆயுதப்படை எல்லைப் புறக்காவல் நிலையத்தின் குனர்மத் பகுதியில் உள்ள ஹல்தர்பாடா கிராமத்தில், எல்லைப் பாதுகாப்புப் படையினர் சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அலோக் பால்(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.) என்பவரின் வீட்டில் இருந்து வெவ்வேறு அளவுகளில் 89 தங்கக் கட்டிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். அவர் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு இந்த தங்கத்தை கடத்திவந்து, அதை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்தார். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 16.067 கிலோ என்றும், சந்தை மதிப்பு ரூ.12 கோடி என்றும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தெற்கு வங்க எல்லைப் பகுதியின் காவல்துறை துணை ஆணையர் ஏ.கே.ஆர்யா கூறுகையில், “மே 25 ஆம் தேதி எல்லைக் கிராமமான ஹல்தர்பாடாவில் உள்ள ஒரு வீட்டில் தங்கக் கட்டிகள் இருப்பதாக எல்லைப் புறக்காவல் காவல் படை வீரர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கிராமத்தில் உள்ள சந்தேகத்திற்கிடமான வீடு முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு, அந்த வீட்டை சோதனையிட்டதில், அலோக் பால் என்பவர் சிக்கினார்” என்றார்.

 எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்
எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்(ஏஎன்ஐ)

விசாரணையின் போது, கைது செய்யப்பட்ட அலோக் பால் கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்தில், வங்கதேசத்தைச் சேர்ந்த தங்கக் கடத்தல்காரருடன் தொடர்பு கொண்டதை ஒப்புக்கொண்டுள்ளார். தனது தங்கத்தை வீட்டில் மறைத்து வைக்க தினமும் ரூ.400 தருவதாக கடத்தல்காரன் கூறியதற்கு சம்மதித்து இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார். அதே கடத்தல்காரன் தனது வீட்டிற்கு சனிக்கிழமை அன்று, மதியம் வெவ்வேறு அளவிளான 89 தங்கக் கட்டிகளை வீட்டில் மறைத்து வைக்க கொடுத்தாகவும், தான் ஏற்கனவே தங்கக் கடத்தல் வழக்கில் ஏற்கனவே ஒரு மாத காலம் சிறையில் இருந்ததாகவும் அலோக் பால் கூறியுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள் வருவாய்ப் புலனாய்வு இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com