தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

படுகொலை செய்யப்பட்ட வங்கதேச எம்.பி.யின் உடையில் வெளியேறிய குற்றவாளி

விசாரணையில் திடீர் திருப்பமாக படுகொலை செய்யப்பட்ட வங்கதேச எம்.பி.யின் உடையில் வெளியேறிய குற்றவாளி..

News image
அன்வருல் அஸிம் அனாா்
Updated On :28 மே 2024, 5:37 am

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கதேச எம்.பி. அன்வருல் கொலை செய்யப்பட்டு, தோலுரித்து, அவரது தசைகள் தனியாகவும் எலும்புகள் துண்டுதுண்டுகளாகவும் மாற்றி பிளாஸ்டிக் பைகளில் வீசிய கொலையாளிகளில் ஒருவர் அன்வருல் அணிந்திருந்த உடையை அணிந்துகொண்டு கொலை நடந்த வீட்டிலிருந்து வெளியேறியதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

வங்கதேச எம்.பி. அன்வருல் வைத்திருந்த ரூ.4.3 லட்சம் ரொக்கப் பணத்தை எடுத்துக் கொண்ட கொலையாளிகளில் ஒருவருடன், மற்றொரு குற்றவாளி அன்வருல்லின் உடையை அணிந்துகொண்டு வீட்டிலிருந்து வெளியேறியிருப்பதை இருநாட்டுக் காவல்துறையினரும் உறுதி செய்திருக்கிறார்கள்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் போலா, நேபாளத்தில் பதுங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பி.யான அன்வருல் அஸீம் அனாா் (56), கொல்கத்தாவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தனிப்பட்ட பயணமாக கடந்த மே 12-ஆம் தேதி வந்தாா். பாராநகா் பகுதியில் உள்ள தனது நண்பா் கோபால் பிஸ்வாஸின் வீட்டில் அவா் தங்கியிருந்தாா். மறுநாள் மருத்துவரை சந்திக்கச் செல்வதாக கூறிவிட்டு சென்ற அன்வருல், அதன்பிறகு திரும்பி வரவில்லை.

இந்தச் சூழலில், கொல்கத்தாவில் அன்வருல் படுகொலை செய்யப்பட்டதாக வங்கதேச அரசு கடந்த புதன்கிழமை தெரிவித்தது. இது திட்டமிட்ட கொலை; இதுதொடா்பாக டாக்காவில் 3 போ் கைது செய்யப்பட்டனா் என்றும் வங்கதேச அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கொல்கத்தாவின் நியூ டவுண் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இக்கொலை நடந்துள்ளது.

எம்.பி.யின் கழுத்தை நெரித்து கொலை செய்து, பின்னா் உடலை துண்டு துண்டாக வெட்டி, பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, பல இடங்களில் வீசியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடா்பாக, வடக்கு 24 பா்கானா மாவட்டத்தின் போங்கான் பகுதியில் கசாப்புக் கடைக்காரா் ஒருவா் கைது செய்யப்பட்டதாக, மேற்கு வங்க சிஐடி போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இவ்வழக்கில் கைதான கசாப்புக் கடைக்காரர் கூறுகையில், மே 13ஆம் தேதி நள்ளிரவு வரை, கொலையாளிகள் அன்வருல் உடலை துண்டுத் துண்டாக வெட்டும் வேலையை செய்திருக்கிறார்கள். அவர்கள் மதுபோதையில் இதைச் செய்ததாகவும், மறுநாள் காலையில் தனது ஆடை முழுக்க ரத்தக் கறையாகிவிட்டதால், அன்வருல் உடையை அணிந்துகொண்டு வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.

அவா் மேலும் கூறுகையில், ‘தற்போது கைதாகியுள்ள நபா் வங்கதேசத்தைச் சோ்ந்தவா். தொழில்முறையில் இறைச்சிக் கடைக்காரரான இவா், இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, மும்பையில் தங்கியிருந்தாா். பின்னா், எம்.பி. அன்வருல் அஸீமை கொலை செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக 2 மாதங்களுக்கு முன் மேற்கு வங்கத்துக்கு அவா் வரவழைக்கப்பட்டுள்ளாா். கொல்கத்தா குடியிருப்பில் எம்.பி. கொலை செய்யப்பட்ட பிறகு, அவரது உடலை துண்டு துண்டாக வெட்ட கொலையாளிகளுக்கு அவா் உதவியுள்ளாா். பின்னா், உடல் பாகங்களை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து பல இடங்களில் வீசியுள்ளனா். தற்போது கைதான நபா் மூலம் உடல் பாகங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

எம்.பி. கொலை செய்யப்பட்ட குடியிருப்பு, அவரது நெருங்கிய நண்பா் ஒருவரால் வாடகைக்கு எடுக்கப்பட்டதாகும். அமெரிக்க குடிமகனான அந்த நண்பா்தான், எம்.பி.யை கொலை செய்ய கூலிப்படையினருக்கு ரூ.5 கோடி கொடுத்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.