பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க வரும் மே 31ஆம் தேதி வரை வருமான வரித் துறை அவகாசம் நீட்டித்துள்ளது.
தவறும் பட்சத்தில் அதிகப்படியான வரித்தொகை பிடித்தம் செய்யப்படும் எனவும் வருமானவரித்துறை எச்சரித்துள்ளது.
பான் அட்டையை பயோமெட்ரிக் கொண்ட ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. தொடர்ந்து பான் - ஆதார் இணைப்பை வலியுறுத்தி தொடர் அறிவுறுத்தல்களும் வந்தன.
பான் அட்டையை ஆதாருடன் இணைக்க மத்திய அரசு பலமுறை கால அவகாசம் வழங்கி வருகிறது.
பான் - ஆதாரை குறிப்பிட்ட காலக்கெடுக்குள் இணைக்காதவர்களுக்கு பின்னர் அபாரதம் விதிக்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து பான் - ஆதார் இணைப்பில் தொய்வு நிலை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பான் - ஆதாரை இணைப்பது குறித்து வருமான வரித்துறை மீண்டும் ஒரு எச்சரிக்கை ஒன்றை இன்று (மே 28) வெளியிட்டுள்ளது. அதிக விகிதத்தில் வரி விலக்குகளைத் தவிர்க்க வரும் மே 31 ஆம் தேதிக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், அதிகப்படியான வரித்தொகை பிடித்தம் செய்யப்படும் (டிடிஎஸ் பொருந்தக்கூடிய விகிதத்தில் 2 மடங்கு) எனவும் எச்சரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐடிஆர் தாக்கல் செய்ய ஜூலை 31 வரை காத்திருக்கக் கூடாதாம்! ஏன்?

தகவல் தர தாமதம்: கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாகத்துக்கு அபராதம்

நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு!

சிலிண்டர் முதல் ஆதார் வரை..! ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



