நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்: நவீன் பட்நாயக்

என் உடல்நிலை மீது உண்மையாகவே மோடிக்கு அக்கறை இருந்தால் எனக்கு தொலைபேசி மூலம் அழைத்திருக்க வேண்டும்.
நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்: நவீன் பட்நாயக்

நான் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், எனக்கு எந்த உடல்நலக்குறைவும் இல்லை என்று ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று பிரதமர் மோடி ஒடிஸாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததற்கான காரணத்தைக் கண்டறிய ஒரு குழு அமைக்கப்படும்.

நவீன் பட்நாயக்கின் உடல்நிலை திடீரென மோசடைந்ததற்கு பின்னணியில் ஏதனும் சதி உள்ளதா? அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததற்கு, தற்போது அவர் சார்பாக அரசை நடத்தி வரும் ஊழல் அரசுதான் காரணமா? என்றவாறு கேள்வி எழுப்பினார்.

மோடி பேசியதற்கு எதிராக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இன்று பதிலளித்துள்ளார். என் உடல்நிலை மீது மோடிக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால் எனக்கு தொலைபேசி மூலம் அழைத்திருக்க வேண்டும்.

நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்: நவீன் பட்நாயக்
கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது!

கடும் வெயிலில் கடந்த சில மாதங்களாக பரப்புரை செய்துவருகிறேன். இதன் காரணமாகவே வந்த அசதியை தவிர, எனக்கு எந்தவித உடல்நலக்குறைவும் இல்லை, நான் நலமுடனும், நல்ல உடல்நலத்துடனும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிப்பதற்கான முயற்சியில் மோடி ஈடுபட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக என் உடல்நிலை குறித்து வதந்திகள் பரப்பி வருகின்றனர். யாரும் கவலைப்பட வேண்டாம், நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன் என்று எக்ஸ் தளத்தில் அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com