பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விவாகரத்து புரளிக்கிடையே பிறந்தநாள் கொண்டாடிய ஐஸ்வர்யா ராய்!

அபிஷேக் பச்சானிடமிருந்து விவாகரத்து பெறவிருப்பதாக வரும் புரளிக்கிடையே பிறந்தநாள் கொண்டாடிய ஐஸ்வர்யா ராய்!

News image
அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்
Updated On :2 நவம்பர் 2024, 12:28 pm

DIN

அபிஷேக் பச்சான் மற்றும் ஐஸ்வர்யா ராய் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு, விவாகரத்தை நோக்கிச் செல்வதாக ஊகங்கள் வெளியாகி வரும் நிலையில், நவ. 1ஆம் தேதி தனது 51வது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார் முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்.

அபிஷேக் பச்சான் - ஐஸ்வர்யா ராய் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்வாதாகவும், பல முக்கிய நிகழ்ச்சிகளில் இரு தரப்பும் தனித்தனியே வருவதும் பங்கேற்பதையும் அடிப்படையாக வைத்து, சமூக வலைதளங்களில் அவர்கள் பிரியப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தங்களது திருமண வாழ்க்கை குறித்து இருதரப்பும் இதுவரை பொது வெளியில் வாய் திறக்கவே இல்லை.

அண்மையில் நடந்த மிகப் பிரபலமானவரின் திருமணத்தில் கூட, அபிஷேக் தனது ஒட்டுமொத்த குடும்பத்துடன் பங்கேற்க, ஐஸ்வர்யாவும், ஆராத்யாவும் தனியாக வந்து பங்கேற்றனர். இதனால், ஏற்கனவே வெளியாகிக் கொண்டிருந்த விவாகரத்து புரளி எனும் தீயில், நெய் விட்டது போல ஆனது.

இதற்கிடையே, பல செய்திகள் இருவரது உறவு குறித்து வெளியாகி வந்த நிலையில், நவம்பர் 1ஆம் தேதி, ஐஸ்வர்யா ராய் தனது 51வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். ஆனால், அபிஷேக் பச்சானோ அல்லது அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாருமோ ஒரு வாழ்த்துச் செய்தியும் வெளியிடவில்லை. இதனால், ஐஸ்வர்யாவின் ரசிகர்கள் பலரும் விவாகரத்து புரளியை உண்மை என கவலையடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.