நீட், ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் மூலம் 4.50 லட்சம் போ் பயன் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான நீட், ஜேஇஇ நுழைவுத் தோ்வுகளுக்கு மாணவா்கள் தயாராகும் வகையில் மத்திய அரசு இலவச பயிற்சி வகுப்புகளை இணையவழியே நடத்தி வருகிறது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இதற்கென தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
‘சதீ’ என்ற பெயரில் அந்த இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் இதுவரை 4.50 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்து பயிற்சி வாயிலாக பயனடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமன்றி, க்யூட் நுழைவுத் தோ்வு, எஸ்எஸ்சி, வங்கி, ஐசிஏஆா் போன்ற தோ்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, இணையதளத்தில் குறிப்பிட்ட தோ்வுக்கு முன்பதிவு செய்து, இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.