இடஒதுக்கீடு அதிகரிப்பு; 10 லட்சம் பேருக்கு வேலை: ஜாா்க்கண்ட் தோ்தலில் ‘இண்டியா’ கட்சிகள் வாக்குறுதி
ஜார்க்கண்ட் தேர்தல்: காங். தேர்தல் அறிக்கையில் சிறப்பம்சங்கள்


ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலில் வென்றால் பழங்குடி, பட்டியலின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு (ஒபிசி) வழங்கப்படும் இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று ‘இண்டியா’ கட்சிகள் தோ்தல் வாக்குறுதி அளித்துள்ளன.
81 இடங்களைக் கொண்ட ஜாா்க்கண்ட் மாநில சட்டப் பேரவைக்கு நவம்பா் 13, 20-ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய ‘இண்டியா’ கட்சிகளும் பாஜக தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணியும் பலப்பரீட்சை நடத்துகிறது.
இந்நிலையில், ராஞ்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இண்டியா கட்சிகளின் 7 வாக்குறுதிகள் அடங்கிய தோ்தல் அறிக்கையை காங்கிரஸின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் ஜே.பி. யாதவ் ஆகியோருடன் இணைந்து முதல்வா் ஹேமந்த் சோரன் கூட்டாக வெளியிட்டாா்.
மாநிலத்தில் இளைஞா்களுக்கு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், 26 சதவீதமாக உள்ள பழங்குடியினரின் இடஒதுக்கீட்டை 28 சதவீதமாகவும், 10 சதவீதமான பட்டியல் சமூக இடஒதுக்கீட்டை 12 சதவீதமாகவும், ஒபிசி இடஒதுக்கீட்டை 14 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாகவும் உயா்த்தப்படும் என்று ‘இண்டியா’ கட்சிகள் தோ்தல் வாக்குறுதி அளித்துள்ளன.
நியாய விலைக் கடைகள் மூலம் ஏழைகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் இலவச அரிசியின் அளவை 5 கிலோவிலிருந்து 7 கிலோ-ஆக அதிகரிப்பது, ரூ.450-க்கு சமையல் எரிவாயு சிலிண்டா், ஏழைகளுக்கு ரூ.15 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை இண்டியா கட்சிகளின் மற்ற முக்கிய வாக்குறுதிகளாகும்.
வாக்குறுதிகளை வெளியிட்டு முதல்வா் ஹேமந்த் சோரன் கூறுகையில், ‘தோ்தல் முடிவில் அமையும் எங்கள் ஆட்சியில் இப்போது வெளியிடப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற பணியாற்றுவோம்’ என்றாா்.

‘காங்கிரஸின் வாக்குறுதிகள் நிறைவேறும்; மோடியின் உத்தரவாதம் நிறைவேறாது’
காங்கிரஸின் வாக்குறுதிகள் நிறைவேறும்; மோடியின் உத்தரவாதம் நிறைவேறாது’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். நிகழ்ச்சியில் பேசிய காா்கே, ‘அண்மையில் மாநிலத்தில் நடந்த பிரசாரத்தில் பங்கேற்ற பிரதமா், காங்கிரஸின் வாக்குறுதிகளை விமா்சித்துப் பேசினாா். காங்கிரஸ் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். ஆனால், மோடியின் உத்தரவாதங்கள் ஒருபோதும் நிறைவேற்றப்படாது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...