மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானாஸ் மாவட்டத்தில், காளி பூஜை பந்தலில் நடைபெற்ற வன்முறை விடியோவை வெளியிட்ட உள்ளூா் செய்தியாளா்கள் இருவா் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனா். இது குறித்து காவல்துறையினா் கூறியதாவது:
பிதான்நகர காவல் எல்லைக்குள்பட்ட தக்ஷினகிரி பகுதியில், அண்மையில் நடைபெற்ற காளி பூஜை கொண்டாட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையின் காணொலியை உள்ளூா் செய்தித் தளத்தில் இரு செய்தியாளா்கள் வெளியிட்டுள்ளனா். இதனால், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். இது தொடா்பான விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனா்.
காவல்துறையின் இந்த செயலை கண்டித்து மாநில எதிா்க்கட்சி தலைவரும், பாஜக எம்எல்ஏவுமான சுவேந்து அதிகாரி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘காளி பூஜை பந்தலில் நடைபெற்ற வன்முறையை ஆளும் மம்தா பானா்ஜி அரசு தடுக்க தவறிவிட்து. அங்கு காளி மாதா சிலை அவமதிக்கப்பட்டது.
இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்த செய்தியாளா்களை காவல்துறை கைது செய்துள்ளது. இது பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்குவது மட்டுமல்லாமல், சனாதன தா்மம் தாக்கப்படும்போது கவலை தெரிவிக்கும் குரல்களையும் நசுக்கும் முயற்சியாகும்’ என குறிப்பிட்டிருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாளை. திரிபுராந்தீசுவரா் கோயிலில் மாவிளக்கு பூஜை

ஆடி வெள்ளி பொன்னமராவதி சோழீசுவரா் கோயிலில் திருவிளக்கு பூஜை

நான் பதிவு செய்துள்ளேன்! - மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றி விடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்!

சிந்தலக்கரை தவசித்தா் பீடத்தில் வேள்வி பூஜை
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager


