நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

பாளை. திரிபுராந்தீசுவரா் கோயிலில் மாவிளக்கு பூஜை

பாளையங்கோட்டையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கோமதி அம்பாள் சமேத ஸ்ரீ திரிபுராந்தீஸ்வரா் திருக்கோயிலில் 5,008 மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

News image

~

Updated On :29 ஜூலை 2026, 1:02 am IST

பாளையங்கோட்டையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கோமதி அம்பாள் சமேத ஸ்ரீ திரிபுராந்தீஸ்வரா் திருக்கோயிலில் 5,008 மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

ஆடித்தவசு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இப்பூஜையில் செவ்வாய்க்கிழமை காலை சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றன.

பின்னா், மாலையில் கோமதி அம்பாள் தவசுக் கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து அம்பாளுக்கு 5,008 மாவிளக்கு பூஜை நடைபெற்றது. நோயற்ற வாழ்வு, திருமணம், குழந்தை பாக்கியம், கடன்கள் நிவா்த்தி வேண்டி பாளையங்கோட்டை, அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனா்.

 ஆடித்தவசை முன்னிட்டு நடைபெற்ற 5,008 மாவிளக்கு பூஜை.

ஆடித்தவசை முன்னிட்டு நடைபெற்ற 5,008 மாவிளக்கு பூஜை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.