
ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புத் துறையில் முதலீடு என்பது நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கான முதலீடு என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி இரண்டும் பொருளாதாரத்தின் உண்மையான உந்து இயந்திரங்கள் என்று அவர் கூறினார்.
தில்லி விஞ்ஞான் பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகாராஜா அக்ரசென் தொழில்நுட்பக் கல்விச் சங்கத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பேசியதாவது:
சமூக நல்லிணக்கம் இல்லாமல் மற்ற அனைத்தும் பொருத்தமற்றதாகிவிடும். வீட்டில் அமைதி இல்லையென்றால், வீடு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் பலனில்லை. சமூக நல்லிணக்கம் நமது அணிகலன். இதை நாம் பல நூற்றாண்டுகளாக பார்த்து வருகிறோம். சகிப்புத்தன்மை என்பது ஒரு நல்லொழுக்கம். இது நமது நாகரிகத்தின் நெறிமுறைகளில் ஆழமாகப் பதிந்துள்ளது. சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் உள்ளடக்கத்தின் முன்மாதிரி சகிப்புத்தன்மை. இது சமூக நல்லிணக்கத்தின் பிரிக்க முடியாத அம்சமாகும் என்று கூறினார்.
உரிமைகளுடன் கடமைகளில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியவர், ஒவ்வொரு உரிமையும் நம்முடைய கடமையால் தகுதி பெறுகிறது. அரசியல் மற்றும் தனிப்பட்ட நலன்களுக்கு அப்பாற்பட்டு தேசத்தின் நலன் இருப்பதைப் போலவே, ஒவ்வொருவரது உரிமையும், அடிப்படை உரிமையும் அவர்களது பொறுப்பால் மீறப்படுகிறது. உரிமைகளை விட கடமைகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் .
அரசியல், பொருளாதாரம், வளர்ச்சி மற்றும் சமூக நல்லிணக்கத்தின் உந்து சக்தியாக இளைஞர்கள் உள்ளனர் என்றார்.
மேலும் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புத் துறையில் முதலீடு என்பது நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கான முதலீடு. இரண்டும் பொருளாதாரத்தின் உண்மையான உந்து இயந்திரங்கள் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.