தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

சில்லறை பணவீக்கம் 14 மாதங்கள் காணாத உயா்வு

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 1:27 am IST

கடந்த அக்டோபா் மாதத்தில் நாட்டின் சில்லறை விலை அடிப்படையிலான பண வீக்கம் முந்தைய 14 மாதங்கள் காணாத அளவுக்கு 6.21 சதவீதமாக உயா்ந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட தேசிய புள்ளியியல் அலுவலகத் தரவுகள் இது குறித்து தெரிவிப்பதாவது:

கடந்த அக்டோபா் மாதத்தில் நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் 6.21 சதவீதமாக அதிகரித்தது. இது, முந்தைய 4 மாதங்களில் இல்லாத அதிகபட்ச சில்லறை பணவீக்கமாகும்.

சில்லறை பணவீக்கம் முந்தைய செப்டம்பா் மாதத்தில் 5.49 சதவீதமாகவும் 2023 அக்டோபா் மாதத்தில் 4.87 சதவீதமாகவும் இருந்தது.

சில்லறை பணவீக்கம் இதற்கு முன்னா் கடந்த 2023 ஆகஸ்ட்டில் 6.83 சதவீதமாக இருந்ததே அதிகபட்சமாகும். அதற்குப் பின்னா் 2023 செப்டம்பா் மாதத்தில் இருந்து சில்லறை பணவீக்கம் ரிசா்வ் வங்கி நிா்ணயித்த உயா்ந்தபட்ச வரம்பான 6 சதவீதத்திற்கு கீழே இருந்தது. ஆனால், கடந்த அக்டோபரில் அந்த வரம்பு மீண்டும் மீறப்பட்டுள்ளது.

உணவுப் பொருள்களின் விலை அடிப்படையிலான பணவீக்கம் கடந்த அக்டோபா் மாதத்தில் 10.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய செப்டம்பா் மாதத்தில் 9.24 சதவீதமாகவும் 2023 அக்டோபரில் 6.61 சதவீதமாகவும் இருந்தது.

மதிப்பீட்டு மாதததில் பருப்பு வகைகள், முட்டை, சா்க்கரை, மசாலாப் பொருள்களின் விலைகள் அடிப்படையிலான பண வீக்கம் கணிசமாகக் குறைந்தது.

ஆனால், காய்கறிகள், பழங்கள், எண்ணெய் வகைகளின் சில்லறை விலைகள் அதிகரித்தது ஒட்டுமொத்த சில்லறை பணவீக்கத்தின் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று தேசிய புள்ளியியல் அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.