
மிகப்பெரிய கட்டண உயர்வு அறிவிப்புக்குப் பிறகு, ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சின்ன சலுகையை அறிவித்திருக்கிறது.
நாள்தோறும் 1 அல்லது 1.5 அல்லது 2 ஜிபி டேட்டாக்களுடன் அளவில்லா அழைப்புக்கான மாதாந்திர திட்டத்தைப் பயன்படுத்தி வருபவர்களுக்கு இந்த புதிய சலுகை அதிகமாக பொருந்தும்.
அதாவது, ஒரு நாளில் ஜியோ நிறுவனம் வழங்கும் டேட்டா தீர்ந்துவிட்டால், குறைந்த நேரத்துக்கு டேட்டாவை பெறுவதற்கான ஒரு சலுகையாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.
அதன்படி, ஜியோ பயனர்கள் ரூ.11 செலுத்தி 10 ஜிபி 4ஜி டேட்டா பேக்கை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரூ.21க்கு 2 ஜிபி, ரூ.51க்கு 6 ஜிபி, ரூ.101க்கு 12 ஜிபி என கூடுதலாக டேட்டா பேக் திட்டங்கள் இருக்கும் நிலையில் தற்போது இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.