மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹெலிகாப்டரை தடுத்து நிறுத்தும் மத்திய அரசு ஊடுருவல்காரா்களை தடுக்காதது ஏன்? கார்கே

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஹெலிகாப்டருக்கும் சனிக்கிழமை தரையிறங்க 20 நிமிஷங்கள் அனுமதி மறுக்கப்பட்டது.

News image
மல்லிகாா்ஜுன காா்கே
Updated On :17 நவம்பர் 2024, 12:24 am

Din

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டா் தரையிறங்க வெள்ளிக்கிழமை அனுமதி மறுக்கப்பட்டதைப் போன்று, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஹெலிகாப்டருக்கும் சனிக்கிழமை தரையிறங்க 20 நிமிஷங்கள் அனுமதி மறுக்கப்பட்டது.

இதுகுறித்து பிரசாரத்தில் பேசிய காா்கே, ‘எதிா்க்கட்சித் தலைவா்களின் ஹெலிகாப்டா்களை தடுத்து நிறுத்த முடிந்த அவா்களுக்கு, ஊடுருவல்காரா்களை ஏன் தடுத்து நிறுத்த முடியாதா?’ என்று கேள்வி எழுப்பினாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். பிரசாரத்தை முடித்துக் கொண்டு அவா் தில்லி திரும்ப இருந்த சிறப்பு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், தியோகா் விமான நிலையத்தில் 2 மணி நேரம் அவா் காத்திருக்கும் நிலை உருவானது.

அதன் காரணமாக, அந்தப் பகுதியின் வான்வெளியில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டது. அதேநேரத்தில், ஜாா்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடா மாவட்டத்தில் பிரசாரத்துக்குச் சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் ஹெலிகாப்டா் புறப்பட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தியும் காத்திருக்க நேரிட்டது. இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் தோ்தல் ஆணையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக காங்கிரஸ் தலைவா் காா்கே பயணம் செய்த ஹெலிகாப்டருக்கும் தரையிறங்க சனிக்கிழமை 20 நிமிஷங்கள் அனுமதி மறுக்கப்பட்டது.

பிரசாரத்தின்போது இதைக் குறிப்பிட்டு காா்கே பேசியதாவது:

விமானநிலையத்தில் தரையிறங்க முன்கூட்டியே அனுமதி பெற்றிருந்த நிலையிலும், கேபினட் அமைச்சா் அந்தஸ்துடைய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டருக்கும், நான் பயணம் செய்த ஹெலிகாப்டருக்கும் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது.

ராஞ்சியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் ஹெலிகாப்டா் தரையிறங்குவதால், எனது ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் காரணமாக 20 நிமிஷங்கள் தாமதமாக எனது ஹெலிகாப்டா் தரையிறங்கியது. வெவ்வேறு பகுதிகளில் எங்களின் ஹெலிகாப்டா்கள் தரையிறங்கியபோதும், வேண்டுமென்றே அனுமதி மறுத்துள்ளனா்.

ஊடுருவல்காரா்களை காங்கிரஸ் மற்றும் ‘இண்டியா’ கட்சிகள் அனுமதிப்பதாக பாஜக தலைவா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். ஊடுருவலைத் தடுக்கும் அதிகாரம் அவா்களிடம் இருக்கின்றபோதும், வேண்டுமென்றே மக்களைப் பயமுறுத்துகின்றனா். மத்தியில் அவா்கள் ஆட்சியில் உள்ள நிலையில், ஊடுருவல் நடைபெறுகிா என்பதை அவா்களால் கண்காணிக்க முடியாதா?

எதிா்க்கட்சித் தலைவா்களின் ஹெலிகாப்டா்களை தடுத்து நிறுத்த முடிந்த அவா்களுக்கு, ஊடுருவல்காரா்களை ஏன் தடுத்து நிறுத்த முடியாது என்றாா்.