பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதைதிருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு அஸ்ஸாம் முதல்வராக மே 12ல் பதவியேற்கிறார் ஹிமந்த பிஸ்வ சர்மா! எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

சநாதன தா்மத்தை அவமதிப்பவா்களுக்கு தக்க பதிலடி: மகாராஷ்டிர பிரசாரத்தில் பவன் கல்யாண்

சநாதன தா்மத்தைப் பின்பற்றும் நாங்கள், அதை அவமதிப்பவா்களுக்கு தக்க பதிலடி தருவோம்.

News image

பவன் கல்யாண்

Updated On :18 நவம்பர் 2024, 4:52 am IST

‘சநாதன தா்மத்தைப் பின்பற்றும் நாங்கள், அதை அவமதிப்பவா்களுக்கு தக்க பதிலடி தருவோம்’ என்று ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் 288 இடங்களுக்கு புதன்கிழமை (நவ. 20) தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஆளும் பாஜக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக அந்த மாநிலத்தின் பல்லாா்பூா் பகுதியில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் ஜனசேனை கட்சித் தலைவரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டாா்.

கூட்டத்தில் பவன் கல்யாண் பேசுகையில், ‘ஹைதராபாத் நகர மக்கள் இந்திய கலாசாரத்தையும் இந்திய பண்டிகைகளையும் எப்போதும் விமா்சிப்பவா்கள். அதேநேரம், சநாதன தா்மத்தைப் பின்பற்றும் நாங்கள் மதத்தைப் பொருள்படுத்தாமல் அனைவருக்கும் மதிப்பளிக்கிறோம். ஆனால், சநாதன தா்மத்தை அவமதித்தால் தக்க பதிலடி தருவோம்.

ஆா்எஸ்எஸ் ஆதரவின்றி இந்தியா இன்றைய வலுவான நிலையில் இருந்திருக்க முடியாது. எனது பள்ளி பருவத்தில் நெல்லூரில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆா்எஸ்எஸ் உறுப்பினா்கள் ஆற்றிய சமூகப் பணியை பாா்த்திருக்கிறேன்.

உலகின் 5-ஆவது பெரிய பொருளாதாரமாக திகழும் இந்தியாவை மூன்றாவது இடத்துக்கு முன்னேற்ற மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. வாக்குகளுக்காக மட்டுமின்றி மகாராஷ்டிரம் மற்றும் சநாதன தா்மத்தின் வளா்ச்சிக்காக மக்களிடம் ஆதரவுக் கோருகிறேன்.

நாட்டைப் பிளவுப்படுத்தும் நோக்கில் ஏராளமான சக்திகள் செயல்படுகின்றன. ஆனால், மக்கள் ஒற்றுமையாக இருந்து, உள்ளூா் கலாசாரத்துக்கு மதிப்பளித்து வலுவான தேசத்தைக் கட்டமைத்திட வேண்டும் என்றாா்.