தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

உ.பி. இடைத்தேர்தலில் 9 தொகுதிகளையும் பாஜக இழக்கும்: அகிலேஷ் யாதவ்

உ.பி.யில் இடைத்தேர்தல் நடந்த 9 தொகுதிகளையும் பாஜக இழக்கும் என்று சமாஜவாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

News image

சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ். - கோப்புப்படம்.

Updated On :22 நவம்பர் 2024, 5:19 pm IST

உ.பி.யில் இடைத்தேர்தல் நடந்த 9 தொகுதிகளையும் பாஜக இழக்கும் என்று சமாஜவாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஜெய்ப்பூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தேர்தலுக்கு பிந்தய கருத்துக் கணிப்புகள் எப்போதும் துல்லியமாக இருக்காது. பொதுமக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் பாஜக 9 தொகுதிகளையும் இழக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

உத்தரப் பிரதேசத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 20ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே உ.பி.யில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 5க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்தியநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.