மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகாராஷ்டிரம், ஜார்க்கண்டில் ஆட்சி அமைப்போம்: கார்கே நம்பிக்கை

மகாராஷ்டிரம், ஜார்க்கண்டில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆட்சிக்கு வரும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்.
Updated On :22 நவம்பர் 2024, 11:04 am

DIN

மகாராஷ்டிரம், ஜார்க்கண்டில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆட்சிக்கு வரும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று பெங்களூருவில் செய்தியாகளுக்கு அளித்த பேட்டியில், எங்களுக்கு எதிர்பார்ப்புகள் உள்ளன. நாங்கள் உழைத்துள்ளோம், நாளை என்ன நடக்கிறது என்று பார்ப்போம், நாளை தெரிந்து கொள்வோம். நான் இப்போது என்ன சொன்னாலும், அது ஒரு ஊகமாக இருக்கும்.

நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். இங்கு (மகாராஷ்டிரம்) அல்லது ஜார்கண்ட் என ஒவ்வொரு மாநிலத்திலும் பல கூட்டங்களில் தனிப்பட்ட முறையில் பங்கேற்றுள்ளேன். நாங்கள் (ஆட்சிக்கு) வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை. இங்கு ஆளும் பாஜக-சிவசேனை (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சிகளின் ‘மகாயுதி’ கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்கும்,

81 தொகுதிகளைக் கொண்ட ஜாா்க்கண்டில் (பெரும்பான்மை 41) ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணியிடமிருந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான வாக்குக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஒரு சில வாக்குக் கணிப்புகள் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக உள்ளன. இரு மாநிலங்களிலும் நவ. 23-ஆம் தேதி(சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.