ஜார்க்கண்ட் முதல்வரின் சகோதரர் வசந்த் சோரன் தும்கா பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதற்கட்ட தேர்தல் நவம்பர் 13ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் நவம்பவர் 20ம் தேதியும் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தும்கா தொகுதியில் போட்டியிட்ட ஹேமந்த் சோரனின் சகோதரர் வசந்த் சோரன் 14,588 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலில் ஜேஎம்எம் வேட்பாளர் வசந்த் சோரன் 95,685 வாக்குகள் பெற்றுள்ளார்.
பாஜக வேட்பாளர் சுனில் சோரன் 81,097 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.
முன்னதாக 2020 இல் நடந்த இடைத்தேர்தலிலும் தும்கா தொகுதியில் வசந்த் சோரன் வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் லோயிஸ் மராண்டியை 6,842 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஜார்க்கண்டில் ஆளும் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சொல்லப் போனால்... காங்கிரஸ் கட்டெறும்பாவது ஏன்?

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரின் பேரன் மர்மமான முறையில் உயிரிழப்பு!

சிறகடிக்க ஆசை சீரியல் படப்பிடிப்பில் 2 மணிநேரம் அழுத வெற்றி வசந்த்! ஏன்?

வெற்றிக்கு ரன்கள், ஜனநாயகத்துக்கு வாக்குகள்! தேர்தல் ஆணையம் நூதன பிரசாரம்!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

