ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஜார்க்கண்ட்: புதிய அரசு பதவியேற்பு தேதி அறிவிப்பு!

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்கவிருக்கிறார்.

News image
- PTI
Updated On :24 நவம்பர் 2024, 11:20 am

DIN

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் இக்கூட்டணிக்கு 56 இடங்கள் கிடைத்துள்ளன.

சனிக்கிழமை (நவ. 23) வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 34 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 16, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை) 2 இடங்களில் வெற்றி பெற்றன.

Story image

இந்த நிலையில், புதிய அரசு பதவியேற்கும் விழா வரும் 28-ஆம் தேதி நடைபெறும் என்று ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் இன்று(நவ. 24) தெரிவித்துள்ளார். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவியை அவர் இன்று ராஜிநாமா செய்துள்ளார். இதற்காக மாநில ஆளுநரை சந்திக்க சென்றபோது செய்தியாளர்களுடன் பேசிய ஹேமந்த் சோரன், மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் நவ. 26-ஆம் தேதி பதவியேற்கவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், பதவியேற்பு விழா 28-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.