உ.பி.யின் சம்பலில் மீண்டும் இணைய சேவை

உ.பி.யின் சம்பலில் பதற்றம் தணிந்த நிலையில் மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது.
உ.பி., சம்பால்.
உ.பி., சம்பால்.
Published on
Updated on
1 min read

உ.பி.யின் சம்பலில் பதற்றம் தணிந்த நிலையில் மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சம்பலில் இணைய சேவை மீண்டும் தொடங்கப்பட்டன என்று மாவட்ட தகவல் அதிகாரி பிரிஜேஷ் குமார் தெரிவித்தார். ஷாஹி ஜாமா மஸ்ஜித் மற்றும் மாவட்டத்தின் பிற இடங்களில் வெள்ளிக்கிழமை தொழுகை அமைதியாக நடந்து முடிந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழுகைக்கு முன்னதாக, ஜாமா மசூதியில் கூடுவதை விட அருகிலுள்ள மசூதிகளில் தொழுகை செய்யுமாறு குடியிருப்பாளர்களை மாவட்ட அதிகாரிகள் வலியுறுத்தினர். காவல்துறையினரைத் தவிர, நிலைமையைக் கண்காணிக்க மசூதியைச் சுற்றி கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

மேலும் கண்காணிப்பை அதிகரிக்க ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி அமைந்துள்ள சா்ச்சை இடத்தில் பாரம்பரிய ஹிந்து கோயில் பிரதானமாக இருந்ததாகவும், 1529-இல் முகலாய பேரரசா் பாபா் கோயிலைப் பகுதியாக இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

ஜாமா மசூதி ஆய்வு- மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு தொல்.திருமாவளவன் கடிதம்

இதுகுறித்து உச்சநீதிமன்ற வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். நீதிமன்ற உத்தரவின்படி, இரு தரப்பினரின் முன்னிலையில் மசூதியில் நீதிமன்ற ஆணையா் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 19) ஆய்வு மேற்கொண்டாா். இதன் தொடா்ச்சியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை 2-ஆம் கட்ட ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வை எதிா்த்து அப்பகுதியில் கூடிய சிலா், காவலா்களை நோக்கி கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனா். வாகனங்களுக்கு தீவைத்தனா். அப்போது அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவா் உயிரிழந்தனா். சுமாா் 20 காவலா்கள் காயமடைந்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி 7 வழக்குகளைப் பதிவு செய்துள்ள காவல் துறை, 25 பேரைக் கைது செய்துள்ளது. பதற்றத்தைத் தவிா்க்க நவ. 30-ஆம் தேதிவரை சம்பல் மாவட்டத்துக்குள் வெளிநபா்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பல் வட்டத்தில் மட்டும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

அந்த மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.