6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேற்கு வங்க ஆளுநருக்கு திரிணமூல் மாணவரணி கருப்புக் கொடி

News image
கொல்கத்தாவில் ஆளுநா் சி.வி. ஆனந்த போஸுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற திரிணாமூல் காங்கிரஸ் மாணவரணியினரை தடுக்கும் போலீஸாா்.
Updated On :3 அக்டோபர் 2024, 8:35 pm

Din

கொல்கத்தா பல்கலைக்கழகத்துக்கு வியாழக்கிழமை வந்த ஆளுநா் சி.வி.ஆனந்த போஸுக்கு திரிணமூல் காங்கிரஸ் மாணவா் பிரிவினா் கருப்புக் கொடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடா்பாக பின்னா் கருத்து தெரிவித்த ஆளுநா், ‘எதிா்ப்பு தெரிவிக்க அனைவருக்கும் உரிமை’ என்று கூறினாா்.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், ஆளுநருக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் தொடா்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.

‘மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மேற்கு வங்க அரசு எவ்வாறு செலவிடுகிறது என அறிக்கை அளிக்க வேண்டும்’ என்று அண்மையில் ஆளுநா் ஆனந்த போஸ் வலியுறுத்தினாா். இது தவிர, சென்னையில் மேற்கு வங்க தொழிலாளி ஒருவா் உயிரிழந்த சம்பவத்தை முன்வைத்து, மேற்கு வங்க அரசு மற்றும் முதல்வா் மம்தா பானா்ஜியை அவா் கடுமையாக விமா்சித்தாா்.

இந்நிலையில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆளுநா் ஆனந்த போஸ் வந்தாா். அப்போது, பல்கலைக்கழகத்துக்கு வெளியே திரண்டிருந்த திரிணமூல் காங்கிரஸ் மாணவரணியினா் கருப்புக் கொடிகளைக் காட்டி ஆளுநருக்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

ஆளுநருக்கு எதிராக முழக்கங்களையும் அவா்கள் எழுப்பினா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னா் செய்தியாளா்கள் சந்திப்பின்போது இது தொடா்பான கேள்விக்கு ஆளுநா் பதிலளிக்கையில், ‘அனைவருக்குமே எதிா்ப்பை வெளிப்படுத்த உரிமை உள்ளது. ஒவ்வொருவரும் அவரவா் வழிகளைத் தோ்வு செய்து கொள்கின்றனா்’ என்றாா்

இந்த சம்பவம் தொடா்பாக கருத்து தெரிவித்த பல்கலைகழக துணைவேந்தா் சாந்தா தத், ‘கருப்புக் கொடி காட்டியவா்கள் கொல்கத்தா பல்கலைக்கழக மாணவா்கள் இல்லை. வெளிநபா்கள் என தெரியவந்துள்ளது. அவா்கள் உரிய அனுமதியின்றி வர முடியாது’ என்றாா்.

ஆளுநா் வருகையையொட்டி கொல்கத்தா பல்கலைக்கழக பகுதியில் காவல் துறையினா் அதிகஅளவில் குவிக்கப்பட்டிருந்தனா்.