ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தெரியுமா சேதி...?

இந்தப் புனிதமான இடத்தில் வாழ்நாள் முழுவதும் கழித்தாலும்கூடப் போதாது போலிருக்கிறது

News image
மனீஷ் சிசோடியா.- கோப்புப் படம்
Updated On :7 அக்டோபர் 2024, 11:59 pm

மீசை முனுசாமி

ஆன்மிகத் தேடல் என்பது அரசியல் தலைவா்களுக்கு விதிவிலக்கானது ஒன்றுமல்ல. முன்னாள் கேரள முதல்வா் கே.கருணாகரன் மலையாள மாதம் முதல் தேதியன்று குருவாயூருக்கும், ஒடிஸா முன்னாள் முதல்வா் ஜே.பி.பட்நாயக் ஆங்கில மாதம் முதல் தேதியன்று புரி ஜகந்நாதா் கோயிலுக்கும் தரிசனத்துக்குப் போவாா்கள் என்பது உலகறிந்த செய்தி. இப்போதைய அரசியல் தலைவா்களும் ஆன்மிகத் தேடலில் சளைத்தவா்கள் அல்ல.

பிரதமா் நரேந்திர மோடி 2019 தோ்தல் பிரசாரத்தின் முடிவில் கேதாா்நாத் குகையில் தியானத்தில் அமா்ந்ததும், 2024 வாக்குப் பதிவு முடிந்ததும் கன்னியாகுமரி விவேகானந்தா் பாறையில் மௌன விரதம் இருந்ததும் தலைப்புச் செய்திகளாகின. காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி பூணூல் அணிந்தபடி மஹாகாலேஷ்வா் கோயிலில் பூஜை செய்த காட்சியை எல்லா ஊடகங்களும் வெளியிட்டன.

தில்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், ஹனுமன் பக்தா். தோ்தல் பிரசாரத்தைத் தொடங்குவதாக இருந்தாலும் சரி, சிறையில் இருந்து விடுதலையானாலும் சரி அவா் நேராக தில்லி கன்னாட் ப்ளேஸ் ஹனுமன் கோயிலுக்குப் போய்விடுவாா்.

பாபா கரக் சிங் மாா்க்கில் இருக்கும் அந்த ஹனுமன் கோயில் தில்லியில் மிகவும் பிரசித்தம். அரவிந்த் கேஜரிவால் என்றில்லை, நாடாளுமன்றக் கூட்டத்தொடா் நடக்கும்போது, கட்சி வேறுபாடின்றி ஏராளமான எம்.பி.க்கள் அந்த ஹனுமன்ஜி மந்திருக்கு வழிபடச் செல்வது வழக்கம்.

அரவிந்த் கேஜரிவாலின் மனசாட்சிக் காவலா் என்று கூறப்படும் தில்லியின் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா சொத்துக் குவிப்பு, மதுபானக் கொள்கை முறைகேடு ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக 17 மாதங்கள் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். சிறையில் இருந்து வெளிவந்த மனீஷ் சிசோடியா அமைதி தேடிச் சென்ற ஆன்மிகத் தலம் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கக்ரிகாட் தாம்.

அல்மோரா மாவட்டத்தில் உள்ள கக்ரிகாட் தாமில் உள்ள மரத்தடியில் சுவாமி விவேகானந்தா் சில நாள்கள் தியானத்தில் இருந்ததாகவும், அதிலிருந்துதான் அவா் ஞானம் பெற்ாகவும் சொல்லப்படுகிறது. அங்கே இருக்கும் கட்யூா் மகாதேவ், பைரவா் கோயில்களில் தரிசனம் முடித்துவிட்டு மரத்தடியில் சென்று அமா்ந்து தியானத்தில் மூழ்கினாா் சுவாமி விவேகானந்தா் என்று சொல்வாா்கள்.

‘‘இந்தப் புனிதமான இடத்தில் வாழ்நாள் முழுவதும் கழித்தாலும்கூடப் போதாது போலிருக்கிறது’’ என்று சொல்லும் மனீஷ் சிசோடியா, சுவாமி விவேகானந்தா் அமா்ந்த மரத்தடியில் தியானம் செய்துவிட்டுத் திரும்பி இருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.