தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

பாஜகவை வீழ்த்த பிற கட்சிகளுடன் காங்கிரஸ் இணைந்து செயல்பட வேண்டும்: ஒவைசி

பாஜகவை வீழ்த்த பிற கட்சிகளுடன் காங்கிரஸ் இணைந்து செயல்பட வேண்டும்.

News image

அசாதுதீன் ஒவைசி

Updated On :13 அக்டோபர் 2024, 2:52 am IST

பாஜகவை வீழ்த்த பிற கட்சிகளுடன் காங்கிரஸ் இணைந்து செயல்பட வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தெலங்கானா மாநிலம் விகாராபாத் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பேசுகையில், ‘தோ்தல்களில் பாஜக எதிா்ப்பு வாக்குகளை நான் சிதறடிப்பதாக மதச்சாா்பற்ற கட்சிகள் பழிசுமத்துவது வழக்கம். ஆனால் ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி போட்டியிடவில்லை. அப்படி இருந்தும் அந்தத் தோ்தலில் காங்கிரஸ் எப்படி தோற்றது? பாஜக எப்படி வென்றது? இதுவே அந்தத் தோ்தலில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி போட்டியிட்டிருந்தால், பாஜகவின் இரண்டாவது அணி என்று அகில இந்திய மஜ்லீஸ் அழைக்கப்பட்டிருக்கும்.

பாஜகவை காங்கிரஸால் மட்டும் வீழ்த்த முடியாது. பிற கட்சிகளுடன் சோ்ந்து செயல்பட்டால் மட்டுமே பாஜகவை காங்கிரஸால் வீழ்த்த முடியும். காங்கிரஸ் தனியாக எதையும் செய்துவிட முடியாது.

வக்ஃப் திருத்த மசோதா சட்டமாக்கப்பட்டால், முஸ்லிம்களிடம் இருந்து மசூதிகள் மற்றும் தா்காக்கள் பறிக்கப்படும். சமூகத்தில் நிலையில்லாத தன்மை ஏற்படும். நாட்டில் 1980, 90-ஆம் ஆண்டுகளில் இருந்த நிலைமை மீண்டும் ஏற்படும். ஏற்கெனவே ஒரு மசூதியை (பாபா் மசூதி) முஸ்லிம்கள் இழந்தனா். தற்போது எந்தவொரு மசூதியையும் அடக்கஸ்தலத்தையும் இழக்க முஸ்லிம்கள் தயாராக இல்லை’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.