தில்லியில் சட்டப்ரேவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் இன்று கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
பிடம்புரா பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுடன் இன்று மாலை 5 மணியளவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரம் சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஆம் ஆத்மி போட்டியிட வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
இரு மாநிலங்களில் உள்ள வாக்காளர்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துவதைவிடத் தில்லி தேர்தல்களில் கவனம் செலுத்த விரும்புகிறது.
மற்ற மாநில தேர்தலில் போட்டியிடுவதால் பாஜகவுக்கு வாக்குகள் பிரிய வழிவகுக்கும் என்று கட்சி பேசி வருகிறது.
தில்லியில் 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 70 இடங்களில் 62 இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம் ஆத்மி எம்.பி. தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை: அரவிந்த் கேஜரிவால் கண்டனம்

திமுகவுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் பிரசாரம்! ஏப்.20 தமிழகம் வருகிறார்!!

கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

பிரதமா் மோடி நோ்மையின்மை மூலம் தோ்தல்களில் வெற்றி: கேஜரிவால் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


