16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

ஒடிசா: வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை-மகள் பாம்பு கடித்து பலி

ஒடிசாவில் வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து தந்தை-மகள் இருவரும் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்.

Published On :

ஒடிசாவில் வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து தந்தை-மகள் இருவரும் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம், பௌத் மாவட்டத்தின் சாரிச்சக் கிராமத்தில் சுகந்த் கன்ஹரும் அவரது 12 வயது மகள் லிபிகாவும் வெள்ளிக்கிழமை இரவு தங்கள் வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது இருவரையும் பாம்பு கடித்ததாகக் கூறப்படுகிறது. உடனே இருவரும் மாவட்ட தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் பரிசோதித்த மருத்துவர், அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்தார்.

பலியானவர் குமாகர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் சாரிச்சாக்கில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என உள்ளாட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து தந்தை-மகள் ஒரே நேரத்தில் பலியான நிகழ்வு அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.