கரூர் பலி! அரசுப் பணி வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்! மார்க்சிய கம்யூ. எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

ஜார்க்கண்ட் தேர்தல்: பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் சம்பயி சோரன்..!

ஜார்க்கண்ட் தேர்தல்: பாஜக வேட்பாளராக முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் போட்டி

News image

PTI

Updated On :19 அக்டோபர் 2024, 9:52 pm IST

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் போட்டியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர், ஹரியாணா சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 66 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று(அக். 19) வெளியிட்டுள்ளது. அதன்படி, சம்பயி சோரன் சராய்கேலா (எஸ்.டி. தொகுதி) தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட்டில் ஆளுங்கட்சியாக உள்ள முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ‘ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில்(ஜேஎம்எம்)’ இருந்து விலகிய அக்கட்சியின் மூத்த தலைவர்களில் முக்கியமானவராக அறியப்பட்ட சம்பயி சோரன், கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின் திடீரென அக்கட்சியிலிருந்து விலகியதுடன், கடந்த ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்தார். தனக்குரிய மரியாதையும் அங்கீகாரமும் கட்சியில் தரப்படவில்லை என்பதே அவரது முக்கியக் குற்றச்சாட்டாக வைக்கப்பட்டது.

ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த போது, ஜார்க்கண்ட் முதல்வராக சம்பயி சோரன் 153 நாள்கள் பதவி வகித்தார். அதனைத்தொடர்ந்து சிறையிலிருந்து ஹேமந்த் சோரன் விடுவிக்கப்பட்டதும், சம்பயி சோரனிடமிருந்து முதல்வர் நாற்காலி கடந்த ஜூலை மாதம் பறிக்கப்பட்டதால் அவர் கடும் அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பயி சோரன்.

சம்பயி சோரன்.

அதேபோல, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரர் துர்கா சோரனின் மனைவியான சீதா சோரன் ஜாம்தாரா தொகுதியிலும் பாஜக வேட்பாளராகப் களமிறக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்ஷன் பாகத்துக்கும் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில்(ஜேஎம்எம்) இருந்து கடந்த மே மாதம் நீக்கப்பட்ட ஹேமந்த் சோரனின் உறவினரான சீதா சோரனுக்கும் பாஜக தேர்தலில் வாய்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.