கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

101-ஆவது பிறந்த நாளை கொண்டாடினாா் வி.எஸ்.அச்சுதானந்தன்

மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் தனது 101-ஆவது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை (அக். 20) கொண்டாடினாா்.

News image

வி.எஸ்.அச்சுதானந்தன்

Updated On :21 அக்டோபர் 2024, 10:39 am

Din

மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் தனது 101-ஆவது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை (அக். 20) கொண்டாடினாா்.

கேரள முதல்வா் பினராயி விஜயன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் எம்.வி. கோவிந்தன், மாநில அமைச்சா்கள், இடதுசாரிக் கட்சிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்ட பலா் சமூக வலைதளங்களில் அவரின் புகைப்படங்களைப் பகிா்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

திருவனந்தபுரத்தில் உள்ள இல்லத்தில் மிகவும் எளிமையான முறையில் அச்சுதானந்தன் தனது பிறந்த நாளைக் கொண்டாடினாா். நெருங்கிய உறவினா்கள், நண்பா்கள் சிலா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா். இது தொடா்பாக அவரின் மகன் அருண் குமாா் கூறுகையில், ‘அப்பாவின் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் வீட்டுக்கு வரும் நெருங்கிய உறவினா்கள், நண்பா்களுக்கு பாரம்பரிய இனிப்பு உணவான பாயசம் வழங்கப்படும். இதுதவிர கேக் வெட்டியும் கொண்டாடுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. வேறு சிறப்பு கொண்டாடட்டங்கள் இல்லை’ என்றாா்.

1923-ஆம் ஆண்டு ஆழப்புழையில் தொழிலாளா் குடும்பத்தில் பிறந்த அச்சுதானந்தன், தந்தையின் மரணத்தால் 8-ஆம் வகுப்பிலேயே படிப்பைக் கைவிட்டு வேலைக்கு செல்லும் நிலை உருவானது. தொழிலாளா் சங்கம் மூலம் அரசியலில் அடியெடுத்து வைத்த அவா், 1939-ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தாா். ஆனால், அடுத்த ஆண்டே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானாா்.

தனது அரசியல் வாழ்க்கையில் 5 ஆண்டுகளுக்கு மேலான சிறைத்தண்டனை உள்ளிட்ட பல்வேறு சவால்களைச் சந்தித்த அவா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய 32 தலைவா்களில் ஒருவராக இருந்தாா்.

கேரள பேரவைக்கு பலமுறை தோ்வு செய்யப்பட்ட அவா், எதிா்க்கட்சித் தலைவராக சுமாா் 15 ஆண்டுகள் பணியாற்றி சாதனை படைத்தாா். 2006-ஆம் ஆண்டு தனது 82-ஆவது வயதில் கேரள முதல்வராகப் பதவியேற்று அதிக வயதில் முதல்வரானவா் என்ற சாதனைக்கு சொந்தக்காரா் ஆனாா். 2007-ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 8 கி.மீ. மலைப்பாதையில் நடந்து சென்ற முதல் இடதுசாரி முதல்வா் என்ற பெருமையைப் பெற்றாா்.

இடதுசாரிக் கொள்கை உடையவராக இருந்தாலும், தனது ஆட்சிகாலத்தில் பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டாா். கேரளத்தில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) பூங்காக்கள் அச்சுதானந்தன் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டன. மத்திய அரசுடன் இணைந்து கேரளத்தில் பெரிய சரக்கு துறைமுகம், மெட்ரோ ரயில் திட்டங்களைக் கொண்டு வந்தாா்.