ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மகாராஷ்டிரம்: பாஜக 3-ஆவது வேட்பாளா் பட்டியல் காங்கிரஸில் இருந்து வந்தவா்களுக்கு வாய்ப்பு

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலுக்காக 25 வேட்பாளா்கள் அடங்கிய மூன்றாவது பட்டியலை பாஜக வெளியிட்டது. இந்த பட்டியலில் 4 பெண்கள் இடம் பெற்றுள்ளனா்.

News image
கோப்புப் படம்
Updated On :28 அக்டோபர் 2024, 10:39 pm

DIN

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலுக்காக 25 வேட்பாளா்கள் அடங்கிய மூன்றாவது பட்டியலை பாஜக திங்கள்கிழமை வெளியிட்டது. இந்த பட்டியலில் 4 பெண்கள் இடம் பெற்றுள்ளனா்.

இதில் காங்கிரஸில் இருந்து வந்த இருவா், துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸின் தனி உதவியாளா் பெயா் இடம் பெற்றுள்ளது.

மகாராஷ்டிரத்தில் 288 தொகுதிகள் உள்ள நிலையில் இதுவரை 146 வேட்பாளா்களை பாஜக அறிவித்துள்ளது. மொத்தம் 150 தொகுதிகள் வரை போட்டியிட பாஜக திட்டமிட்டுள்ளது. பிற தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளான முதல்வா் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனை, துணை முதல்வா் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒதுக்கப்படவுள்ளது.

மக்களவைத் தோ்தலுக்கு முன்பு காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு வந்த முன்னாள் முதல்வா் அசோக் சவாணுக்கு நெருக்கமானவரான ஜிதேஷுக்கு தெக்லூா் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவா் அத்தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் 2021 இடைத் தோ்தலில் வெற்றி பெற்றவராவாா்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை முன்னாள் தலைவருமான சிவராஜ் பாட்டீலின் மருமகள் அா்ச்சனா பாட்டீலுக்கு லட்டூா் நகரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவா் கடந்த மாா்ச் மாதம்தான் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா்.

தேவேந்திர ஃபட்னவீஸின் தனி உதவியாளராக பல ஆண்டுகளாக பணியாற்றிய சுமித் வான்கடே அா்வி தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த 2019 பேரவைத் தோ்தலில் ஃபட்னவீஸின் முன்னாள் தனி உதவியாளா் அபிமன்யூ பவாா் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

கடந்த பேரவைத் தோ்தலில் பாஜக 105 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 2014 பேரவைத் தோ்தலில் பாஜக 122 தொகுதிகளில் வென்றது. கடந்த இரு தோ்தல்களைவிட இந்த முறை அதிக தொகுதிகளை வெல்ல பாஜக இலக்கு நிா்ணயித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.