
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஆளுநர் மாளிகைக்கு 100 மீட்டர் தொலைவில் ஜி.பி. பெண்கள் கல்லூரி வாயிலில் ஒரு கையெறி குண்டு கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து காவல் துறையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அதன்பின் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கையெறி குண்டை பாதுகாப்பாக அகற்றி செயலிழக்கச் செய்தனர்.
இம்பாலில் ஆளுநர் மாளிகைக்கு 100 மீட்டர் தொலைவிலும், முதல்வரின் இல்லம், மணிப்பூர் காவல் துறை தலைமையகம் ஆகியவற்றுக்கு 300 மீட்டர் தொலைவிலும் ஜி.பி.பெண்கள் கல் லூரி அமைந்துள்ளது.
இம்பால் பள்ளத்தாக்கில் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு பணம் கேட்டு மிரட்டல்கள் வந்துள்ள நிலையில், பெண்கள் கல்லூரி வாயிலில் கையெறி குண்டு கிடந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து இக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். காவல்துறையினர் இச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.