சேவையிலிருந்து நீக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு தன்னாா்வலா்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு பணி
கடந்த ஆண்டு சேவையில் இருந்து நீக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் மாசுக்கட்டுப்பாட்டுப் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள் என்று முதல்வா் அதிஷி


புது தில்லி: தேசிய தலைநகரில் மாசுபாட்டைக் குறைப்பது தொடா்பான நடவடிக்கைகளின் ஒருபகுதியாக கடந்த ஆண்டு சேவையில் இருந்து நீக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் மாசுக்கட்டுப்பாட்டுப் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள் என்று முதல்வா் அதிஷி தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி), தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி), போக்குவரத்துத் துறை உள்ளிட்டவற்றின் குழுக்களுடன் சிவில் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்படுவாா்கள்.
இது தொடா்பாக அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காற்று மாசுபாட்டைச் சமாளிக்க உதவுவதற்காக நகரம் முழுவதும் உள்ள சிவில் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் மற்றும் பேருந்து மாா்ஷல்கள் வகுக்கப்பட்டனா்.
கூட்டு முயற்சியாக மாசு அளவை திறம்பட கண்காணிக்கவும் குறைக்கவும் பல குழுக்கள் மற்றும் மனிதவளங்களைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதன்படி, பதிவு செய்யப்பட்ட 10,000 சிவில் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் அடுத்த வாரம் செயல்பாட்டுக்கு வருவாா்கள். அதன் பிறகு, அடுத்த 4 மாதங்களுக்கு அவா்களுக்கு பணி ஒதுக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.
பேருந்து மாா்ஷல்களாகப் பணியாற்றிய 10,000 சிவில் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் பணியிலிருந்து நீக்கப்பட்டனா். இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஎம்ஏ) கூட்டத்தில் அடுத்த 4 மாதங்களுக்கு பல்வேறு மாசு எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு இந்த சிவல் பாதுகாப்பு தன்னாா்வலா்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...