தீபாவளியில் ஐடி, பொதுத் துறை பங்குகள் சரிவு!
தீபாவளி நாளான இன்று (அக். 31) பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் தொடங்கியது.


தீபாவளி நாளான இன்று (அக். 31) பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் தொடங்கியது. ஐடி, பொதுத் துறை, ஆட்டோ துறை பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.
வணிகத்தின் 4வது நாளான இன்று சென்செக்ஸ் 141.69 புள்ளிகள் சரிந்து 79,800.49 புள்ளிகளாக வணிகம் தொடங்கியது. இது மொத்த வணிகத்தில் 0.18% சரிவாகும்.
இதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 29.75 சரிந்து 24,311.10 புள்ளிகளுடன் வணிகம் தொடங்கியது. இது மொத்த வணிகத்தில் 0.12% சரிவாகும்.
தேசிய பங்குச் சந்தையில் 1030 பங்குகள் நேர்மறையாக இருந்தன. 613 பங்குகள் எதிர்மறையாக சரிவுடன் காணப்பட்டன.
நிஃப்டி வங்கித் துறை பங்குகள் 36.95 புள்ளிகள் உயர்ந்து 51,844.45 புள்ளிகளாக வணிகமானது.
23 நிறுவன பங்குகள் சரிவு
எல்&டி, சன் பார்மா, ஆக்சிஸ் வங்கி, ஹிந்துஸ்தான் லிவர், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், நெஸ்ட்லே இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் இருந்தன. அதேநேரத்தில் டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், எச்சிஎல் டெக், டைட்டன், மாருதி உள்ளிட்ட 23 நிறுவனங்களின் பங்குகள் சரிவுன் காணப்பட்டன.
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) அக்டோபர் 30 ஆம் தேதி ரூ.4,613 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர். அதே நேரத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ. 4,518 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
இதையும் படிக்க | தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...