தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வயநாட்டில் சுற்றுலாத்துறையை மீட்டெடுக்க வேண்டும்: ராகுல் காந்தி

வயநாட்டில் சுற்றுலாத் துறையை மீட்டெடுத்து மக்கள் வருகையை ஊக்குவிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

News image
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
Updated On :1 செப்டம்பர் 2024, 10:54 am

DIN

வயநாடு மோசமான நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து படிப்படியாக மீண்டு வருவதாகவும், அங்கு சுற்றுலாத் துறையை மீட்டெடுத்து மக்கள் வருகையை ஊக்குவிக்க ஒருங்கிணைந்த முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் சில கேரள காங்கிரஸ் தலைவர்களுடன் காணொளி வாயிலாக சந்திப்பு நடத்தினார். அந்தச் சந்திப்பில் வயநாட்டில் நடைபெறும் நிவாரணப் பணிகள் குறித்தும், சுற்றுலாத் துறையை மீட்பது குறித்தும் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மோசமான நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து வயநாடு படிப்படியாக மீண்டு வருகிறது. அங்கு, இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியிருக்கும் நிலையில், நிவாரணப் பணிகளில் அனைத்து சமுதாயம் மற்றும் அமைப்பைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து இருப்பதைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த நிலையில் வயநாடு மக்களுக்கும் பெரிதும் உதவுக்கூடிய முக்கிய அம்சமான சுற்றுலாவை நான் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். மழை ஓய்ந்தவுடன் வயநாட்டில் சுற்றுலாத் துறையை மீட்டெடுத்து, மக்கள் வருகையை ஊக்குவிக்க ஒருங்கிணைந்த முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ”நிலச்சரிவு ஏற்பட்டது வயநாட்டில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே. முழு ஊரிலும் அல்ல. பிரமிக்க வைக்கும் இயற்கை எழில் கொண்ட சுற்றுலா தளமான வயநாடு விரைவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க இருக்கும் பயணிகளை ஈர்க்கத் தயாராகும்.

அழகான வயநாட்டில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு கடந்த காலத்தைப் போலவே மீண்டும் ஆதரவை வழங்கவேண்டும்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.