கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
பாலியல் கொலை வழக்கு திங்கள்கிழமை(செப். 9) அன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.


கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை வழக்கு திங்கள்கிழமை(செப். 9) அன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், கடந்த மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் மருத்துவர் கொலை வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்த விசாரணைக்கு எடுத்துள்ளது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரை உள்ளடக்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், பெண் மருத்துவர் கொலை வழக்கு விசாரணை நாளை நடைபெறுகிறது.
முன்னதாக கடந்த மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, மருத்துவர் கொலை வழக்கில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் மெத்தனப் போக்குடன் செயல்பட்டதாக கொல்கத்தா காவல்துறையின்மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. மேலும், நாடு முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்திருந்த மருத்துவர்கள் பணிக்கு திரும்பவும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
அதற்கு முந்தைய விசாரணையில், மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்க 10 பேர் கொண்ட தேசிய செயற்குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...