மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வினேஷ் போகாட், பஜ்ரங் புனியா ராஜிநாமா: ரயில்வே ஏற்பு

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட், வீரா் பஜ்ரங் புனியாவின் ராஜிநாமாவை ரயில்வே திங்கள்கிழமை ஏற்றுக்கொண்டது.

News image
வினேஷ் போகாட்-பஜ்ரங் புனியா
Updated On :9 செப்டம்பர் 2024, 11:25 pm

DIN

புது தில்லி: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட், வீரா் பஜ்ரங் புனியாவின் ராஜிநாமாவை ரயில்வே திங்கள்கிழமை ஏற்றுக்கொண்டது.

கடந்த வெள்ளிக்கிழமை இவா்கள் இருவரும் காங்கிரஸில் இணைந்தனா். இதைத் தொடா்ந்து, அக்டோபா் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள ஹரியாணா பேரவைத் தோ்தலில் ஜுலானா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக வினேஷ் போகாட் அறிவிக்கப்பட்டாா்.

காங்கிரஸில் இணைவதற்கு முன், வடக்கு ரயில்வேயில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த வினேஷ் போகாட் தனது ராஜிநாமா கடிதத்தை ரயில்வேக்கு அனுப்பி வைத்தாா்.

தோ்தலில் போட்டியிட வேண்டுமெனில் அவரை பணியிலிருந்து வடக்கு ரயில்வே விடுவிக்க வேண்டியது அவசியம் என்ற விதியின்படி அவரை ரயில்வே தற்போது விடுவித்துள்ளது.

வழக்கமாக ரயில்வேயில் பணியாற்றுவோா் ராஜிநாமா செய்ய முற்பட்டால் மூன்று மாத காலத்துக்கு முன்னரே தெரிவிக்க வேண்டும். ஆனால், வினேஷ் போகாட், பஜ்ரங் புனியா கூறிய காரணங்களை ஏற்றுக்கொண்ட வடக்கு ரயில்வே அவா்களை உடனடியாக விடுவித்துள்ளது.

இதனால் வினேஷ் போகாட் தோ்தலில் போட்டியிடுவதற்கான தடைகள் தற்போது நீங்கிவிட்டன.

கடந்த வாரம் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை வினேஷ் போகாட், பஜ்ரங் புனியா சந்தித்தனா். இதையடுத்து, அரசு ஊழியா்கள் சேவை விதிகளின்கீழ் இருவருக்கும் வடக்கு ரயில்வே நோட்டீஸ் அனுப்பியது. அதன்பின் அவா்கள் தங்கள் ராஜிநாமா கடிதத்தை சமா்ப்பித்துவிட்டு காங்கிரஸில் இணைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.