
சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 30 பேர் உத்ரகாண்ட் மாநிலத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
18 ஆண்கள், 12 பெண்கள் என மொத்தம் 30 பேர் ஆதி கைலாஷுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற நிலையில், ஆதி கைலாஷ் செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட்டு 18 கிலோமீட்டர் தூரத்தில் 30 பேரும் சிக்கிக் கொண்டனர்.
இதனையடுத்து தமிழக அரசு உத்தரகண்ட் அரசுடன் இணைந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு 30 பேரும் பத்திரமாக மீட்கப்பட்ட விடியோ வைரலானது.
மீட்கப்பட்ட தமிழர்கள் தில்லியிலிருந்து விமானம் மூலம் தமிழகம் திரும்ப உள்ளனர்.
பாதுகாப்பாக மீட்கப்பட்ட அனைவரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.