கல்வி, சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு குணங்கள் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தும் என தந்தை பெரியார் சொன்னதை மேற்கோள் காட்டிப் பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
தந்தை பெரியாரின் 146-வது பிறந்த நாளிள் இன்று (செப். 17) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ளதாவது,
கல்வி, சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு ஆகியவை மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தும் என தந்தை பெரியார் கூறியதை மேற்கோள் காட்டியுள்ளார்.
சிறந்த சமூக சீர்திருத்தவாதி, சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான போராளி தந்தை பெரியாருக்கு நமது அஞ்சலியை செலுத்துவோம் எனப் பதிவிட்டுள்ளார்.
அதோடு திராவிட இயக்கத்தின் தந்தை எனக் குறிப்பிட்டு பெரியாரின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.