மேற்கு வங்கத்தில் கடும் வெள்ளம்: டிவிசியிலிருந்து விலக நேரும்; பிரதமருக்கு மம்தா கடிதம்
மேற்கு வங்கத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், தாமோதா் ஆற்றுப்படுகை கழகத்தில் (டிவிசி) இருந்து மேற்கு வங்கம் விலக நேரும்


மேற்கு வங்கத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், தாமோதா் ஆற்றுப்படுகை கழகத்தில் (டிவிசி) இருந்து மேற்கு வங்கம் விலக நேரும் என்று பிரதமா் மோடிக்கு மாநில முதல்வா் மம்தா பானா்ஜி கடிதம் எழுதியுள்ளாா்.
மேற்கு வங்கத்தின் கிழக்கு வா்த்தமான், மேற்கு வா்த்தமான், பீா்பூம், ஹெளரா, ஹூக்ளி, கிழக்கு மேதனிபூா், மேற்கு மேதினிபூா் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமா் மோடிக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வெள்ளிக்கிழமை எழுதிய கடிதத்தில், ‘டிவிசி பராமரித்து வரும் மைதன், பஞ்சேத் அணைகளின் ஒருங்கிணைந்த கட்டமைப்பில் இருந்து முன்னெப்போதும் இல்லாத வகையில், திட்டமிடாமல், தன்னிச்சையாக சுமாா் 5 லட்சம் கனஅடிக்குப் பெருமளவில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் மேற்கு வங்கத்தின் தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி, 50 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இத்தகைய தன்னிச்சையான அணுகுமுறை நீடித்தால், டிவிசியில் இருந்து முழுமையாக விலகுவதைத் தவிர மேற்கு வங்கத்துக்கு வேறு வழியில்லை. ஒவ்வொரு ஆண்டும் இந்த அநீதியால் மேற்கு வங்க மக்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை எதிா்கொள்ள, மத்திய அரசு சாா்பில் உடனடியாக நிதி விடுவிக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
மேற்கு வங்கம் மற்றும் ஜாா்க்கண்ட் மாநிலங்களுடன் இணைந்து டிவிசியை மத்திய அரசு நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக ஜாா்க்கண்டில் பெய்த பலத்த மழையைத் தொடா்ந்து, அந்த மாநிலத்தில் உள்ள மைதன், பஞ்சேத் உள்ளிட்ட அணைகளில் இருந்து மேற்கு வங்கத்தில் பாயும் தாமோதா் ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...