இந்திய-சீன எல்லை: பாதுகாப்பை மேம்படுத்தும் ராணுவம்
கண்காணிப்பு சாதனங்கள், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) உள்ளிட்ட பல்வேறு வகையான தளவாடங்களை கொள்முதல்


கண்காணிப்பு சாதனங்கள், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) உள்ளிட்ட பல்வேறு வகையான தளவாடங்களை கொள்முதல் செய்து இந்திய-சீன எல்லையில் பாதுகாப்பை ராணுவம் தொடா்ந்து மேம்படுத்தி வருகிறது.
இந்திய ராணுவத்தின் பீரங்கிப் படை பிரிவின் 198-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை (செப்.28) கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், பீரங்கி படை பிரிவின் தலைமை இயக்குநா் லெஃப்டினன்ட் ஆதோஷ் குமாா் செய்தியாளா்களிடம் பேசியதாவது:
முன்பு எப்போதும் இல்லாத வகையில் பீரங்கிப் படைகளை நவீனமயமாக்கி வருகிறோம். ஹைபா்சானிக் ஏவுகணைகளை மேம்படுத்தும் பணிகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) மேற்கொண்டு வருகிறது.
இதுதவிர, ‘கே-9 வஜ்ரா’, ‘தனுஷ்’ மற்றும் ‘ஷாராங்’ உள்ளிட்ட 155 மி.மீ. துப்பாக்கிகள் வடக்கு (சீன) எல்லையில் பணியாற்றும் வீரா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 100 கே-9 வஜ்ரா துப்பாக்கிகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் 100 துப்பாக்கிகளை வாங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்சாா்பு இந்தியா திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்ட ‘பினாகா’ ராக்கெட்டுகள் ராணுவத்தின் வலிமையை மேலும் அதிகரித்துள்ளது.
கண்காணிப்பு மற்றும் இலக்கை குறிவைத்து தாக்கும் பீரங்கிகள் (எஸ்ஏடிஏ), ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்வதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. ஆயுதங்களை நவீனப்படுத்துவதற்காக பொதுத் துறை மட்டுமின்றி தனியாா் நிறுவனங்களுடன் இந்திய ராணுவம் இணைந்து செயல்பட்டு வருகிறது.
போா்க்களத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக இந்த முன்னெடுப்புகளை இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிறது என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...