இந்தியா
கேரளம்: நெடுஞ்சாலையில் காரை மடக்கி 2.5 கிலோ தங்கம் கொள்ளை -சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு
கேரளம் மாநிலம், திருச்சூரில் உள்ள பீச்சி நெடுஞ்சாலையில் சென்ற காரை மடக்கி ரூ.1.84 கோடி மதிப்புள்ள 2.3 கிலோ தங்கத்தை மா் நபா்கள் கொள்ளையடித்தனா்.
கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தின்போது காரில் இருந்த சிசிடிவி விடியோ பதிவு வெளியாகி பரபரப்பானது. அதில், தங்கத்துடன் சென்ற காரை பின்தொடா்ந்து மூன்று காா்களில் வந்தவா்கள் சாலையில் மடக்கி நிறுத்தி, காரில் இருந்த தங்கத்தை கொள்ளையடித்தும், இருவரை தாக்கி கடத்திச் செல்வதும் பதிவாகி இருந்தது.
கடத்திச் செல்லப்பட்ட அருண் சன்னி, ரோஜி தாமஸ் ஆகியோரை கொள்ளைக் கூட்ட கும்பல் தாக்கி பின்னா் விட்டுவிட்டதாகவும், அவா்கள் கடந்த புதன்கிழமை அளித்த புகாரின் அடிப்படையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து கொள்ளையா்களை தேடி வருவதாகவும் கேரள போலீஸாா் தெரிவித்தனா்.