திருப்பதி வருகை ரத்து: ஜெகன்மோகன் ரெட்டி

தனது வருகையால் மக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்
ஜெகன்மோகன் ரெட்டி (கோப்புப் படம்)
ஜெகன்மோகன் ரெட்டி (கோப்புப் படம்)Instagram | Jagan Mohan Reddy
Published on
Updated on
1 min read

திருப்பதிக்கு செல்லவிருந்த ஜெகன்மோகன் ரெட்டி, தனது வருகையை ரத்து செய்துள்ளார்.

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்படுவதாகக் கூறி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டிய பாவத்திற்கு பரிகாரம் செய்யும் விதமாக சனிக்கிழமையில் (செப். 28) நடக்கவிருக்கும் சடங்குகளில் கலந்து கொள்ளுமாறு, மக்களுக்கு முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், திருப்பதிக்கு செல்வதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படலாம் என்பதால், தனது வருகையை ரத்து செய்துள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்ததாவது ``மாநிலத்தில் அரக்கர்களின் ஆட்சிதான் நடக்கிறது. திருமலை கோயிலுக்கு எனது வருகையைத் தடுக்க அரசு முயற்சிக்கிறது.

கோயிலுக்கு வருகை தரவிருந்த ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவர்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அந்த அறிவிப்பில திருமலை கோயிலுக்கு வருகை அனுமதிக்கப்படவில்லை என்றும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி. ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிக்கு தேவையான ஒப்புதல் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

திருப்பதி லட்டு சர்ச்சையை உண்மையான பிரச்னைகளிலிருந்து திசைதிருப்ப சந்திரபாபு நாயுடு முயல்கிறார். ஒருபுறம், அவர்கள் எனது வருகையைத் தடுக்க நோட்டீஸ் அனுப்புகிறார்கள்; மறுபுறம், பாஜக தொண்டர்கள் மாநிலத்திற்குள் நுழைகிறார்கள்.

திருமலை லட்டுக்கள் தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுடு பொய்யாகக் கூறுகிறார். இது கோயிலின் புனிதத்தன்மை மற்றும் பெருமை மீதான வெளிப்படையான தாக்குதலாகும். இது நியாயமா?

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் லட்டு பிரசாதம் குறித்து சந்திரபாபு நாயுடு அப்பட்டமாக பொய் சொல்கிறார்; அவரது கூற்றுக்கள் ஆதாரமற்றவை.

ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும், லட்டுக்கான டெண்டர்கள் அறிவிக்கப்படுகின்றன. குறைந்த விலையை வழங்கும் ஏலதாரர், திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தால் அங்கீகரிக்கப்படுகிறார். இதில் அரசின் தலையீடு இல்லை. திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் மத்திய அமைச்சர்கள் மற்றும் பிற மாநில முதல்வர்களால் பரிந்துரைக்கப்பட்ட தனிநபர்களைக் கொண்டுள்ளது’’ என்று கூறியுள்ளார்.

திருப்பதி கோயிலுக்கு செல்லும் ஜெகன்மோகன் ரெட்டி, நம்பிக்கை பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட பாஜகவும் ஜனசேனை கட்சியும் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.