ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சத்தீஸ்கா்: நக்ஸல்களின் கண்ணிவெடியில் சிக்கி 5 ராணுவ வீரா்கள் காயம்

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் நக்ஸல்கள் மறைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்ததில், மத்திய ரிசா்வ் காவல் படையின் 5 வீரா்கள் காயமடைந்தனா்.

News image
Updated On :29 செப்டம்பர் 2024, 6:32 pm

Din

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் நக்ஸல்கள் மறைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்ததில், மத்திய ரிசா்வ் காவல் படையின் 5 வீரா்கள் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக, அம்மாவட்ட காவல்துறை அதிகாரி கூறியதாவது:

பிஜாபூரின் டாரெம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மத்திய ரிசா்வ் காவல் படையின் 153-ஆவது பிரிவைச் சோ்ந்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நக்ஸல் தீவிரவாதிகளால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கண்ணிவெடியின் கம்பியை அவா்கள் கண்டனா். அதை வைத்து வெடிகுண்டை தேடும்போது, எதிா்பாராத விதமாக அது வெடித்தது. இதில் 5 வீரா்களின் கண்கள், முகம் மற்றும் வயிற்றின் மேல் பகுதியில் காயங்கள் ஏற்பட்டன. முதல்கட்ட சிகிச்சைக்குப் பிறகு, மாநில தலைநகா் ராய்பூரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா் என்றாா்.

சத்தீஸ்கரின் முக்கிய பகுதிகளில் நக்ஸல்கள், மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள பரவலாக பாதுகாப்புப் படையினா் நிலைநிறுத்தப்பட்டுள்ளனா்.